Saturday 29 October 2011

அவள்...


உறக்கம் கூட பொய்த்து போயின
உன் உரையாடல் நீண்ட போது....
கண்களும் இமைக்க மறுத்தன 
உன் விழி இரண்டில் நான் தெரிந்த போது...
கடல் அலைகளும் அழகிய கவிதை என எடுத்து சென்றன
உன் பெயரை கரையோரம் நான் எழுதிய போது...

சுவடுகள்


கனவு வானில் கற்பனை உலகில்
என்னுள் வந்து மனச் சிறகையும் தந்து 
பறக்க எண்ணிய வண்ணம்
சிறகுகளை கேட்கிறாய்...
முயற்சித்தேன், முடியாமல் தோற்றேன்...
அழியாத நினைவுகளை மீண்டும் மனதிற்குள் கோர்க்கிறேன் 
மாலையாக...

சொல்லித் தெரிவதில்லை...


உள்ளத்தின் கதவரையில் 
உயிரென்னும் தூரிகைக் கொண்டு
நான் வரைந்த முதல் ஓவியம் உன் முகம் தான்...
உன் பிறப்பு யாருக்காக என்று தெரியவில்லை
ஆனால்,
நான் வாழ்வது உனக்க மட்டும் தான்...

நினைவுகள்


பசுமையான நினைவுகள் 
என் மனதில் உன்னை பற்றி சேதி சொல்ல,
வெண்ணிலவே ,
நீ தொடும் தூரத்தில் இல்லை என்றாலும்,
அவள், உன்னை பார்க்கும் நேரத்தில்
என்னை பற்றி எண்ணச் செய்...

இன்னும் ஒரு முறை...


சொல்ல நினைத்த சொற்கள் தடுமாறிய போதும்
விழிகள் அவற்றை கண்டு கொண்டன...
சிதறும் புன்னகையும் சட்ட்று நெளிந்த போதும்
அன்பு அவற்றை கவிதையாகவே எடுத்துக் கொண்டன...
ஆயிரம் வார்த்தைகள் சொல்லியும் கேட்கவில்லை என்ற போதும்
இன்னும் ஓராயிரம் வார்த்தைகளில் தொடர்கிறது...

அலைகள்....

அலைகள்....
என் உள்ளத்தில் துன்பத்தின் சாரல் மழையாக பொங்கும் வேலை,
விலகி நிற்கும் உனக்குள்ளும் சாரல்கள் அடிக்குமா?
மனதை விட்டு 
என் நினைவுகள் உன்னை விட்டு அகன்ற போதிலும்,
உன்னைப் பற்றிய நினைவுகள் 
எனக்குள் சுவடுகளாய் விட்டுச் சென்றதற்கு நன்றி.....

Saturday 22 October 2011

நீ தான்...


நீ தான்...

உன் கண்களில்
சூரிய, சந்திரர்கள் இல்லை,
உன் பேச்சு நடையில் 
தென்றல் தவழ்ந்து வரவில்லை,
உன் சொற்களில் 
இசை எழுவதும் இல்லை,
இருந்தபோதும் 
நான் காணும் கனவுகளில் தோன்றினாய்,
நான் சுவாசிக்கும் காற்றில் 
இரண்டறக் கலந்து வந்தாய்,
என்றும் என்னுடன்,
என் உள்ளத்தில் வாழ்ந்து வருவாய்...

Wednesday 5 October 2011

July 25

ஜூலை 25

என் கண்கள் அன்று தான்
முதன் முறையாக எனக்காக அழுதன....
தற்கொலை ஒரு முட்டாள் தனம்
இருந்தும் அதன் கதவையும் தட்டி விட்டு தான் வந்தேன் ...
அவளிடம் பேச வார்த்தைகள் கிடைக்காதா என தேடிய என் உதடுகள்
அன்று வெட்டு பட்டு நின்றன....  காரணம் 
என் காதுகள் அதிர்ந்தன... 
அன்பாய் பேசிய அவளது வார்த்தைகள்...
அன்று என் மரியாதையை காபற்றிக்க சொல்லியது...
மனம் கலங்கியது... 
அவளிடம் கேட்டால்.. .
முடிவு செய்துவிட்டேன் என்கிறாள்.....
நான் யாரிடமும் கெஞ்சியது இல்லை...
அன்று துடித்து கதறினேன்... ஆனால் அவள் கேட்க தயாராக இல்லை...
வீட்டுக்கு செல்வதற்குள் சென்று சேர்ந்துவிட வேண்டும் 
என உள்ளம் துடித்தது...
ஜூலை என்னை எல்லாவற்றில் இருந்தும் மீட்டு எடுக்கும் மாதம்...
அன்று எனது உயிரையும் காப்பற்றியது...
இதுவும் கடந்து போகும் என்று இருந்தாலும் ...
அவளது நினைவுகள் என்னை கொன்று புதைத்து...
இன்றும் அவள் நினைவுகள் எனக்குள் அப்படியே தான் இருகின்றன...
ஆனால் அவளை பொறுத்தவரையில் நான் இன்று  கெட்டவன்...
பேசுவதருக்கு நேரம் கேட்டு ஆசை பட்டதற்கு....
இழிவு பேச்சு என தொடங்கி பிறகு கழற்றி விடப்பட்டேன்...
வேதனைகள் சூழுந்து கவனம் சிதறி வெறுப்புடன்....
இன்றும் தொடர்ந்து கொண்டு தான் இருகின்றேன்...
துயரத்தில் நான் பேசும் வார்த்தைகள் கூட பொய் என்று தான் நினைப்பாள்.....
துடிக்கும் இந்த தருணங்கள் என்று அடங்கும்....
தவிப்புடன் நான் சிந்தும் கண்ணீர் துளிகள் அவளுக்கு வேடிக்கை தான்....
காதல் வென்றாலும், தோற்றாலும்....
ஏமாற்றம், துன்பம்,  துயரம்...
இறுதியில் மரணம்....
இது ஆண்களுக்கு மட்டுமே...
இருந்தால் மீண்டும் சந்திப்போம்.....................................................................

Monday 1 August 2011

ஏமாற்றம்

ஏமாற்றம்
                                         
 கடல் போல் எல்லையில்லாதது எனது கனவு
நான் அவளை காணாது வரை
என் பெற்றோரை கூட நான் நம்பியதில்லை 
நான் அவளை நம்பினேன் 
உணவு, தூக்கம் என அனைத்தையும் மறந்தேன் 
நான் அவளிடம் பேசும் வரை 
உலகை ரசிப்பது போல் அவள் வார்த்தைகளை ஏற்றேன்
ஆனால் கோவம் தான் அவளுக்கு முக்கியமாம்
கோவத்தில் கூறிய செய்திகளை ஏற்கிறாள்
உள்ளத்தில் இருந்து கூறும் வார்த்தைகளை நம்ப மறுக்கிறாள்
நஞ்சை விட கொடியதாம் என் வார்த்தைகள்
அதனால் தான் என்னவோ என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டால்
முள்ளை கூட கண்ணில் வைத்தால் தாங்கிக் கொள்ளலாம்
உயிர் தாளாமல் துடிப்பதை தாங்கிக் கொள்ள முடியவில்லை....

Monday 25 April 2011

என் கண்ணீர் துளிகள்


பல போராட்டங்களுக்கு பிறகு, பல அவமானங்களுக்கு பிறகு,
இதோ மேல வந்துவிட்டேன் என்ற போது
மீண்டும் என்னை கீழே தள்ளுகிரானே
அந்த ஆண்டவனை நான் பழிக்கின்றேன்

என்னை போன்ற ஆட்களுக்கு வர கூடாத
ஆசைகளை எல்லாம் வர வழைத்து
என்னை துன்பத்தில் தள்ளி விட்டு வேடிக்கை பார்க்கும்
அந்த இறைவனை நான் பழிக்கின்றேன்

நம்பிக்கையே அச்சாரம் என்று இருந்தேன்,
அது தான் எனது முட்டாள்தனம் என
என்னை கேலி செய்து என் வாழ்க்கையை அழித்து
என்னை உயிருடன் கொன்று புதைத்த
அந்த கடவுளை நான் பழிக்கின்றேன்

எனது வார்த்தைகள் வேடிக்கையாய் இருந்தாலும் ,
எனது  வாழ்க்கை அடுத்தவர்களது வேடிக்கைக்கு அல்ல ,
இது வரை நான் பெற்ற ஏமாற்றங்கள் என்னை பாதித்ததில்லை,
ஏனெனில் நான் யாரையும் நம்பியதில்லை,
முதன் முறையாக என்னை விட ..... மிகவும் நம்பினேன்,
கிடைத்தது அருமையாக ஏமாற்றம், 
முதுகில் குத்துபட்டு காயங்களுடன்...
என் எதிரிகள் கூட என்னை முகத்துக்கு நேர் தான் தாக்கினர்,
வலித்தது இருந்தும் எனக்குள் இருந்த தன்னம்பிக்கை,
என்னை அடுத்த நொடியில் மீட்டு எடுத்தது.
ஆனால் இப்போது...

     நான் அழுவது எனக்குள் மட்டுமே...

Tuesday 19 April 2011

மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!


மனம் இருந்தால் மார்க்கம் உண்டு!
உடனடி கோவம் , மனத் தளர்ச்சி, வேதனை என இன்றைய இளைய சமுதாயம் வாழ்க்கையில் ஏற்படும் சிறு சிறு பின்னடைவுகளால் தங்களின் உள்ளுணர்வுகளை வெளிபடுத்துகின்றனர்.  இது அவர்களை மட்டும் பாதிப்பதில்லை அவர்களை சுற்றி உள்ளவர்களையும் பாதிப்புக்குள்ளாக்கிறது என்றால் அது சற்றும் மிகையாகாது. 
          தோல்வியை கண்டு அஞ்சி நடுங்கும் இவர்களுக்கு அதிகம் இவரை பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  வேதனைக்கும், துன்பத்துக்கும் இவரை மிகவும் பிடிக்கும், இருந்தும் அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி இன்று உலக அரங்கில் ஒரு எடுத்துகாட்டாக விளங்குகிறார் ஜெசிக்கா காக்ஸ்.
        கேளிக்கைகளுக்கு அதிகம் முக்கியத்துவம் தரும் இன்றைய இளைய தலைமுறையினருக்கு இவரை பற்றி தெரிந்திருக்க வாய்பில்லை.  27 வயது பெண்மணியான இவர் தான் உலகிலேயே முதன் முறையாக இரு கைகள் இன்றி வெறும் கால்களினாலே  வானூர்தியை ஓட்டிச் சென்ற விமானி ஆவார்.  
பிறப்பிலேயே இரு கைகள் இன்றி பிறந்த ஜெசிக்கா ஒரு நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்.  அப்பா இசை கச்சேரிகளை நடத்தும் பேண்ட் வாத்தியக்காரர். முதலில் பிள்ளையை பார்த்த அதிர்ச்சியில் உறைந்து போன இவரது பெற்றோர்கள், ஜெசிக்காவை பல மருத்துவர்களிடம் கொண்டு சென்றனர், தங்கள் மகள் இவ்வாறு பிறந்ததற்கான காரணத்தை அறிய முயன்று, ஜெசிகாவிற்கு கைகள் வர சாத்தியமா என்று கூட முயற்சித்தனர்.  அனால் அனைவரும் இயலாது என கூறிய போதும் மனம் தளராமல், அவளது தாய் ஜெசிக்காவை மற்ற குழந்தைகளை போல் விளையாட பழக்கினார்.  பொம்மைகளை கொண்டு கால்களினால் விளையாட துவங்கியவர், சீருடர் பயிற்சி, நீச்சல் , என அனைத்திலும் கற்றுத தேர்ந்தார். மனித அறிவியல் பற்றிய படிப்பான சைகோலஜியில் பட்டம் பெற்றவர், கொரியா வகை  சண்டையான டே வான் டோ வில் கருப்பு பட்டயத்தை பெற்றவராவார்.          படிக்கும் போதே வானூர்தியில் ஓட்டுனராக பறக்க வேண்டும் என்று எண்ணம் கொண்டவர் அதற்கான முயற்சியிலும் இறங்கினார். ஆரம்பத்தில் இவருக்கு வானூர்தி பயிற்சி அளித்தவர், சற்று நம்பிக்கை இல்லாமல் இருந்த போதும், அருமையாக வானூர்தியை வானில் ஏற்றும் மற்றும் இறக்கும் முறையை அழகாக கையாண்டு பயிற்சியாளரின் பாராட்டை பெற்றார்.  
சாதாரணமாக இது போன்ற பயிற்ச்சிக்கு ஆறு மாதங்கள் பிடிக்கும் என்றால், ஜெசிக்காவிற்கு மூன்று வருடங்கள் ஆனது. 
         அவரது கடினமான உழைப்பு, தன்னம்பிக்கை, துணிச்சல் என அனைத்தும் அவருக்கு 25 வது பிறந்த நாள் பரிசாக வானூர்தி ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்டது. இதன் மூலம் உலகில் இரு கைகள் இன்றி வானில் வானூர்தியை ஓட்டிச் சென்ற முதல் பெண் என்ற பெருமையை பெற்றார்.  இவரது இந்த வருகை உலகையே திரும்பி பார்க்கச் செய்தது இன்று உலகையே சுற்றி வரும் ஜெசிக்கா, மற்ற பெண்களை போல் உணவு சமைக்க முடியும், உண்ண முடியும் மகிழுந்து ஓட்ட முடியும், என அனைத்து வேலைகளையும் எளிதாக செய்து வருகிறார்.  
எல்லாம் இருந்தும் சிறு சிறு துயரத்துக்கு தங்களையும் துயரப்படுத்தி மற்றவர்களையும் வேதனைக்கு உள்ளாக்கும் இன்றைய இளைய தலை முறையினருக்கு, ஜெசிக்காவின் மனம் தளராத எண்ணமும், தன்னம்பிக்கையும், முடியும் என்ற நேர்த்தியான சிந்தனையும்  சிறந்த எடுத்துகாட்டு என்பதில் ஒரு துளியும் பொய்யல்ல.
                                                                                        - ம.க.அருண் பிரசாத்